மாநகராட்சி வழங்கிய அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்: ஆட்சியர் உத்தரவு - மாநகராட்சி வழங்கிய அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட அனுமதி அட்டையை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
![மாநகராட்சி வழங்கிய அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்: ஆட்சியர் உத்தரவு ஷில்பா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7090822-528-7090822-1588788493244.jpg?imwidth=3840)
தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “திருநெல்வேலி மாநகர பகுதிக்கு உட்பட்ட சில்லறை மதுபான கடைகளில் வாடிக்கையாளர்கள் மதுபானங்கள் வாங்க வரும்பொழுது தமிழக அரசு விதித்துள்ள சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
மதுபானங்களை வாங்க வரும் பொழுது வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கிடையில் 6 அடி இடைவெளி இருக்கும் வகையில் நின்று மதுபானம் வாங்க வேண்டும்.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஏற்கனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் வெளியில் வருவதற்கு வழங்கப்பட்டுள்ள பச்சை நிற (திங்கள், வியாழன்) நீல நிற (செவ்வாய், வெள்ளி) மற்றும் பிங்க் நிற (புதன், சனி) அடையாள அட்டைகளை மதுபானம் வாங்குவதற்கு தவறாமல் எடுத்து வர வேண்டும். வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது” என தெரிவித்துள்ளார்.