திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு பத்து முதுநிலை பொறியியல் படிப்புகள் அப்போதைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த படிப்புகளில் ஆண்டுக்கு 25 மாணவர்கள் வீதம், 250 மாணவர்கள் இணைந்து கல்வி பயின்று வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நான்கு முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது இந்த ஆண்டு முதல் மேலும் 6 முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.
அதன்படி ஏரோநாட்டிக்கல் பொறியியல், தெர்மல் பொறியியல், பயன்பாட்டு மின்னணுவியல், கட்டமைப்புப் பொறியியல், தொலை உணர்வு பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய ஆறு பாட பிரிவுகள் இங்கு பயிற்றுவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பாடப்பிரிவுகளில் இணைவதற்காக டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: எம்.ஐ.டி. கல்லூரியில் 66 மாணவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு