நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கும் போட்டி. அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாங்கள் மக்களை நம்பி போட்டியிடுகிறோம்.
காங்கிரஸ் கட்சி சத்தியத்தையும் நேர்மையையும் நம்பி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் லட்சக்கணக்கான மக்களை சந்தித்துப் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுதே இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியானது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க : தமிழ் இனத்தின் துரோகி சீமான் - காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்