ETV Bharat / state

"செயற்கையான ஆவின் பால் விலை உயர்வை கட்டுப்படுத்துக" - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம்

author img

By

Published : Feb 2, 2023, 9:59 AM IST

கோவையை தொடர்ந்து நெல்லையிலும் ஆவின் பால் விலை உயர்வு லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவின்
ஆவின்

சென்னை: கோவையில் ஆவின் பாலில் கொழுப்புச் சத்து மற்றும் திடச்சத்துக்களை குறைத்து விலையை மட்டும் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், நெல்லையிலும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல்ச சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "பிப்ரவரி-1 ஆவின் உருவான தினத்தன்று நிர்வாக காரணங்களுக்காக என்ற புதுவிதமான காரணத்தைக் கூறி, கொழுப்பு சத்து அளவை குறைத்து அறிவிக்கப்படாத மறைமுக பால் விலையேற்றத்தை மக்கள் தலையில் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் சுமத்தியது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆவின் நிர்வாகமோ ஒருபடி மேலே போய் ஒன்றியத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு என்ற காரணத்தைக் கூறி பொதுமக்களுக்கான விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் பால் முகவர்கள் கொள்முதல் செய்கின்ற சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விலையை லிட்டருக்கு 40 காசுகளை இன்று (பிப்2) முதல் உயர்த்தியுள்ளது.

இது பொதுமக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 2 ரூபாய் வரை விற்பனை விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும். கடந்த ஆண்டு இறுதியில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் நிறைகொழுப்பு பால் வணிகரீதியான பால் என்கிற பொய்யான காரணத்தை கூறி அந்த வகை பாலுக்கான விற்பனை விலை மட்டும் உயர்த்தப்பட்டது.

மேலும் சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விற்பனை விலை உயர்த்தப்படாது என அரசும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு ஒன்றியங்கள் வாரியாக, விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்த தொடங்கியிருப்பதையும், அதனை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே ஆவின் பால் விற்பனை மூலம் பால் முகவர்களுக்கு போதிய வருவாய் இல்லாமல் கடும் இன்னல்களை சந்தித்து வரும் சூழலில் தற்போது நெல்லை மாவட்டத்தில் பால் முகவர்கள் திணிக்கப்பட்டுள்ள விலை உயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அந்த விலை உயர்வு சில்லரை வணிகர்களிடம் திணிக்கப்படும் சூழலுக்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த விலை உயர்வானது இறுதியில் நுகர்வோர் தலையிலேயே சுமத்தப்படும் அதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு ஆவின் பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தினால் கடுமையான எதிர்ப்புகள் வரும் என்பதாலேயே ஒவ்வொரு ஒன்றியங்களாக உயர்த்திட அரசு அனுமதி அளித்துள்ளதா என தெரியவில்லை.

அதுமட்டுமின்றி கோவை, நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களைத் தொடர்ந்து இதர ஒன்றியங்களிலும் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தி, அதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, பால் விற்பனையின் அளவை குறைத்து, ஆவினை அழிவை நோக்கி கொண்டு செல்ல ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களோ என்கிற சந்தேகமே தற்போது மேலோங்கி நிற்கிறது.

உண்மை அதுவாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் கோவை, நெல்லை உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஒன்றியங்களும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பால் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது எனவும், தற்போது மாற்றப்பட்டுள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையே தொடர வேண்டும் என ஒன்றிய பொது மேலாளர்களுக்கும், ஆவின் நிர்வாக இயக்குனருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்டை நாடுகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடியில் உதவி.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.