ETV Bharat / state

'மக்கள் வெளிநாட்டுப் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற முடிவுக்கு வர வேண்டும்'

திருநெல்வேலி: பொதுமக்கள் விளம்பரத்தைப் பார்த்து ஏமாறாமல், வெளிநாட்டு பொருள்களை வாங்கமாட்டோம் என்ற முடிவுக்கு வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

tamil-nadu-merchants-association-joint-consultative-meeting

author img

By

Published : Mar 14, 2020, 9:36 PM IST

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் மாநில, மாவட்ட இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளால் வணிகர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், கடைகள் அமைக்க மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளையன், ”ஆட்சியாளர்கள் அந்நிய வணிகத்திற்குத் துணை போகின்றனர். சென்ற காங்கிரஸ் ஆட்சியில் அந்நிய வணிகத்திற்கு கதவுகள் திறந்துவைக்கப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியிலாவது அந்நிய வணிகத்திற்கான கதவுகளை மூடுவார்கள் என்று எண்ணியிருந்தால், அவர்களோ அந்தக் கதவுகளையே கழட்டி வீசி விட்டனர். இதனால் மக்களுக்கு வரக்கூடிய பேராபத்து இப்போது தெரியவில்லை, இக்காரணங்களால் சில்லரை வணிகர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர்.

நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்க இணைப்பு ஆலோசனைக் கூட்டம்

மேலும் கொக்ககோலா, பெப்சி போன்ற அயல் நாட்டு குளிர்பானங்கள் உடலுக்குக் கேடு என்று பல ஆய்வறிக்கைகள் கூறினாலும், பொதுமக்கள் விளம்பர மோகத்தால் அதைத்தான் வாங்கி பருகுகின்றனர். அந்நிய வணிக ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல், வெளிநாட்டுப் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற முடிவுக்கு வரவேண்டும். அப்போதுதான் உள்ளாட்டு வணிகர்கள் பாதுகாக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நாங்க வெளியே போறோம்... அங்க அவங்க இருக்காங்க' - ஏலக்காய் வியாபாரிகள் புறக்கணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.