நடிகர் சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் "காப்பான் " நேற்று வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் படத்தை வரவேற்கும் வகையில் ப்ளக்ஸ், பேனர் தியேட்டர்களில் வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். சமீபத்தில் சாலை நடுவே இருந்த ப்ளக்ஸ் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து பேனர் வைப்பதில்லை என கட்சிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், இனி வரும் புதிய பட வெளியீட்டின்போது பேனர் கட்டவுட்கள் வைப்பதற்கு பதிலாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்கினால் அவரே காப்பான் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் பட வெளியீட்டின்போது 200தலைக்கவசங்கள் வழங்குகிறோம் என்று கூறினர். மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காவல்துறை துணைஆணையர் வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். பின்பு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல்துறை துணை ஆணையர் சரவணன் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கினார்.
இதையும் படிங்க : பெரியார் கருத்துக்கு விளக்கம் கொடுத்த 'காப்பான்' சூர்யா