ETV Bharat / state

ஆசானின் இறுதியாத்திரையில் சிலம்பம் சுற்றி மரியாதை செலுத்திய மாணவர்கள்!

author img

By

Published : May 22, 2022, 8:00 PM IST

Updated : May 22, 2022, 8:07 PM IST

தங்களை சாதிக்க வைத்த சிலம்ப ஆசானுக்கு சிலம்பம் சுற்றி இறுதி மரியாதை செலுத்திய மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

master death students honour
ஆசானின் இறுதியாத்திரையில் சிலம்பம் சுற்றி மரியாதை செலுத்திய மாணவர்கள்!

நெல்லை: வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த சிலம்ப ஆசான் ஐயா துரையின் மறைவிற்கு, அவரிடம் சிலம்பம் கற்ற சீடர்கள் சிலம்பக்கலை மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள மணலிவிளை பகுதியைச்சேர்ந்தவர், சிலம்ப ஆசான் ஐயா துரை. இவர் முன்னாள் மாநில சிலம்ப சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். இவர் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு சிலம்ப விளையாட்டினை கற்றுத்தந்துள்ளார். இவரிடம் சிலம்பம் கற்ற பல விளையாட்டு வீரர்கள் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுக்களில் பங்கேற்றுப் பரிசு பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு பாரம்பரிய கலையான சிலம்ப விளையாட்டுக்களை சொல்லித்தரும் அளவிற்கு பல்வேறு ஆசான்களையும் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ஆசான் ஐயா துரையின் மறைவிற்கு அவரிடம் சிலம்பம் கற்ற சிஷ்யர்கள் சிலம்பம் சுற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் வழி நெடுகிலும் அவர் கற்றுத்தந்த சிலம்ப விளையாட்டின் மூலம் வீரவணக்கம் வைத்து கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர்.

ஆசானின் இறுதியாத்திரையில் சிலம்பம் சுற்றி மரியாதை செலுத்திய மாணவர்கள்

இதையும் படிங்க: கோயில் காளை உயிரிழப்பு - ஆட்டம் பாட்டத்துடன் இறுதி அஞ்சலி

Last Updated : May 22, 2022, 8:07 PM IST

For All Latest Updates

TAGGED:

Tvl
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.