ஜம்மு: 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், இன்று (அக்.1) மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவு மொத்தம் 40 தொகுதிகளுக்காக நடைபெறுகிறது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.60 சதவீத வாக்குகள், 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
44.08% voter turnout recorded till 1 pm in the third and final phase of the Jammu and Kashmir Assembly elections.
— ANI (@ANI) October 1, 2024
Bandipore-42.67%
Baramulla-36.60%
Jammu-43.36%
Kathua- 50.09%
Kupwara-42.08%
Samba-49.73%
Udhampur-51.66% pic.twitter.com/08D6WPCf9g
இவ்வாறு நடைபெறுகிற தேர்தலில் காஷ்மீரில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஜம்முவில் 24 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும். இவற்றில் 7 சட்டமன்றத் தொகுதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, 20 லட்சத்து 9 ஆயிரத்து 33 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து 9 ஆயிரத்து 130 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் முதல்முறை வாக்காளர்கள், 35 ஆயிரத்து 860 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட 32 ஆயிரத்து 953 மூத்த குடிமக்கள் வாக்களிக்கின்றனர்.