ETV Bharat / state

விமானப் படை சாகச நிகழ்ச்சி; சென்னை விமான நிலைய சேவைகளில் மாற்றம்! - chennai flight services time change - CHENNAI FLIGHT SERVICES TIME CHANGE

சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 7:54 AM IST

சென்னை: வருகிற அக்டோபர் 6ஆம் தேதி இந்திய விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் மெரினா கடற்கரையில் நடக்கவுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்.1) முதல் 8ஆம் தேதி வரையில் விமான சேவைகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தினம்: இந்திய விமானப்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் அக்டோபர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் 8ஆம் தேதி 92வது இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

விமானங்களின் வீர சாகசங்கள்: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்.6ஆம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரையில் 72 விமானங்கள் வீர சாகசங்கள் நடைபெற உள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை பொதுமக்கள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

விமான சேவைகளின் நேரங்கள் மாற்றம்: விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதையொட்டி, நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளின் நேரங்களில் மாற்றம் செய்து இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (அக்.1) பகல் 1:45 முதல் மாலை 3:15 மணி வரையில், சென்னை விமான சேவைகள் நிறுத்தப்படும். இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எந்த விமானங்களும் புறப்படவும், தரை இறங்கவும் செய்யாது. மேலும், அக்டோபர் 2 முதல் 8ஆம் தேதி வரையில் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கூடுதல் இடைவெளிகளில் நிறுத்தப்படும்.

இதையும் படிங்க: மெரினா மேல் பறக்கப் போகும் போர் விமானங்கள்! எங்கே? எப்படி? பார்க்கலாம்

எனவே, இந்த தேதிகளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் எப்போது சென்னைக்கு வந்து சேரும்? சென்னையில் இருந்து எப்போது புறப்பட்டுச் செல்லும்? என்ற கால நேரத்தை முன்னதாகவே தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல் தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இந்திய விமானப்படை 21 ஆண்டுகளுக்குப் பின்பு சென்னையில் நடத்த இருக்கும் விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில் சென்னை விமான நிலையம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திகை நிகழ்ச்சி:

நாள்இடம்நேரம்
அக்டோபர் 01சென்னை மெரினா கடற்கரைபகல் 1:45 முதல் மாலை 3:15 வரை
அக்.02மெரினா கடற்கரைகாலை 11 மணி முதல் பகல் 1மணி வரை
அக்.03தாம்பரம் விமானப்படை தளம்காலை 10:45 முதல் காலை 11 மணி வரை
அக்.04 மெரினா கடற்கரைகாலை 11 மணி முதல் பகல் 1மணி வரை
அக்.05தாம்பரம் விமானப்படை தளம்காலை 10:45 முதல் காலை 11 மணி வரை
மெரினா கடற்கரைபிற்பகல் 2 மணி முதல் மாலை 3 மணி வரை
அக்.06மெரினா கடற்கரைகாலை 11 மணி முதல் பகல் 1மணி வரை
அக்.07தாம்பரம் விமானப்படை தளம்காலை 10:45 முதல் காலை 11 மணி வரை விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகைகள்
அக்.08தாம்பரம் விமானப்படை தளம்காலை 10:45 முதல் காலை 11 மணி வரை விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு

இந்த நேரங்கள் அனைத்தும் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.