தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நகர் முழுவதும் தீயணைப்புத் துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தென்காசி மாவட்ட அரசு மருத்துமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிளைவுட் பலகையில் மூன்று வண்ண பெயிண்ட்டுகள் அடிக்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன. கரோனா பாதிக்கப்படும் நபர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் பாதுகாப்பானதாக இந்த பிளைவுட் பலகைகள் தயார் செய்யப்படுவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், “கரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருவதால் சிறப்பு வார்டு அமைக்க பிளைவுட் பலகை உற்பத்தி செய்து தரும்படி அதிகாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். மொத்தம் 200 பலகைகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.
இதையும் படிங்க: 85 ரூபாய்க்கு காய்கறி தொகுப்பு பை - மாவட்ட ஆட்சியர்