ETV Bharat / state

'இறப்பு கணக்கிலும் பெரும் குளறுபடி'- விசாரணை ஆணையம் ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை - நெல்லை மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: கரோனா சிகிச்சையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையின் மீது எழும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால், தனி விசாரணை ஆணையம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

social-activists-call-on-the-commission-of-inquiry-into-the-nellai-government-hospital-scandal

author img

By

Published : Oct 26, 2020, 7:31 PM IST

Updated : Oct 27, 2020, 7:34 PM IST

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 11,192 பேருக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பிற மாவட்டங்களைப் போல இங்கும் ஆரம்பக்கட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.

குறிப்பாக மாவட்ட காவல்துறையினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 144 தடை உத்தரவை மீறியதால் செப்டம்பர் 15ஆம் தேதி வரை, 7,788 நபர்கள் மீது 4,910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4,421 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை நெல்லை மாவட்டத்தில் கரோனா தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர் திரும்பியதால், நெல்லையிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.

இருப்பினும், தற்போது வரை ஒரு நாளைக்கு சராசரியாக 100 நபர்கள் மட்டுமே மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒருவித நற்பெயர் ஏற்பட்டாலும் கூட, சமீபகாலமாக நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடு சம்பவங்கள் சமூக ஆர்வலர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு உணவு வகைக்காக தினமும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? எத்தனை மருத்துவர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்? என்பது உள்பட பல்வேறு தகவல்களைக் கேட்டு நெல்லை அரசு மருத்துவமனை பொது தகவல் அலுவலர் செந்தில்வேலுக்கு மனு அனுப்பியிருந்தார்.

அதற்கு உணவு வகைக்காக மொத்தம் ஒரு கோடியே 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது தகவல் அலுவலர் வழக்கறிஞர் பிரம்மாவுக்கு பதிலளித்திருந்தார். அதேசமயம் ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது போன்ற விவரங்களை சரியான முறையில் அளிக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க நெல்லை சிந்துபூந்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்ற நபருக்கு கரோனா பாதிப்பு இல்லாமலேயே கரோனா இருப்பதாகக் கூறி சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது சிவசுப்பிரமணியன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிவசுப்ரமணியனுக்கும் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகக்கூறி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், நான்கு நாட்களில் அவருக்கு குணமாகிவிட்டதாகக் கூறி மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். அதற்கு சிவசுப்பிரமணியன் தான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் நீங்கள் கரோனா என்று என்னை அழைத்து வந்ததால் நிறுவனத்தில் என்னை பணியமர்த்த தயங்குவார்கள். எனவே, எனக்கு டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இதையடுத்து அங்கிருந்த அரசு மருத்துவர்கள் வழங்கிய டிஸ்சார்ஜ் சம்மரியை பார்த்து சிவசுப்பிரமணியன் அதிர்ந்து போனார். அதாவது அவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால், டிஸ்சார்ஜ் சம்மரியில் அவர் ஜூலை 3ஆம் தேதியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 12ஆம் தேதி வரை சிகிச்சை பெற்றது போலவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் கரோனா இல்லாத தன்னை கரோனா இருப்பதாக சித்தரித்து, முறையான சிகிச்சை அளிக்காத காரணத்துக்காக தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறி சுப்பிரமணியன் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெல்லை மாவட்டத்தில், கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் குளறுபடி நடந்திருப்பதும் அம்பலமானது.

அதாவது, வழக்கறிஞர் பிரம்மா, நெல்லை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் எத்தனை நபர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவலைக் கேட்டு, அரசு மருத்துவமனையின் பொது தகவல் அலுவலருக்கு மனு அளித்திருந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவருக்கு பொதுத் தகவல் அலுவலர் செந்தில்வேல் அளித்த பதிலில், நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதம் ஒரு நபரும், ஜூன் மாதம் 11 பேரும், ஜூலை மாதம் 131 பேரும், ஆகஸ்ட் மாதம் 142 பேரும் என மொத்தம் 286 பேர் நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், சுகாதாரத்துறை சார்பில் தினமும் வெளியிடப்படும் மீடியா புல்லெட்டினில், அதே மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் பிரம்மாவுக்கு தகவல் கிடைக்கப்பெற்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரை 185 பேர் மட்டுமே நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் நெல்லையில் கரோனாவில் உயிரிழந்த 100 பேர் இறப்பு மறைக்கப்பட்டு இருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூட அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து கரோனா சிகிச்சை தொடர்பாக அம்பலமாகும் முறைகேடு சம்பவங்களால் அரசு மருத்துவமனை வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஒருபுறம் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், நெல்லை மாவட்ட அரசு மருத்துவ நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கிடையில் நெல்லை அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக உணவுப் பாதுகாப்புத் துறையை இந்தச் சம்பவத்தில் மாற்றிவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதாவது வழக்கறிஞர் பிரம்மா எழுப்பிய பெரும்பாலான கேள்விகளுக்கு தங்களிடம் தகவல்கள் இல்லை என்றும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தான் அதற்கான தகவல் கேட்க இருப்பதாகவும் பிரம்மாவுக்கு மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பி இருந்தார். அதேபோல் வழக்கறிஞர் பிரம்மா எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கேட்டு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலருக்கும் மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் கடிதம் எழுதி இருந்தார். அதற்குப் பதிலளித்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி நீங்கள் கேட்கும் தகவலுக்கும் எங்கள் துறைக்கும் சம்பந்தம் இல்லை, நீங்கள் வேண்டுமென்றே தகவல் அளிப்பதை தாமதப்படுத்தும் நோக்குடன் இந்த விஷயத்தில் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு கடிதம் அனுப்பியதாக சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.

நெல்லை அரசு மருத்துவமனை மீது அடுத்தடுத்து எழும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால், தற்போது வரை பரபரப்பு நீடிக்கிறது. இதற்கிடையில் நெல்லையில் கரோனா சிகிச்சையில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு உண்மை தன்மையை விளக்கி, அதற்கு தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா நம்மிடம் கூறுகையில்

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா நம்மிடம் கூறுகையில், "நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு உணவுக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற விவரங்களை கேட்டு இருந்தேன். ஆனால், பொத்தாம் பொதுவாக மொத்தம் ஒரு கோடியே 42 லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தார்கள். அதில், திருப்தி இல்லாததால் மேல்முறையீடு செய்தேன். இதேபோல் நெல்லையில் கரோனாவால் இதுவரை எத்தனை நபர்கள் இறந்துள்ளார்கள் என்று கேட்டபோது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 285 பேர் இறந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சுகாதாரத்துறை சார்பில் 185 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டது. எனவே, இதன் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் பெரும் முறைகேடு நடந்திருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. உணவு செலவு தொடர்பாக மேல்முறையீடு செய்த எனது மனுவை அரசு மருத்துவனை முதல்வர் உணவுப் பாதுகாப்புத்துறைக்கு அனுப்பியுள்ளார். ஆனால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தங்களுக்கு இந்த தகவல் ஏதும் சம்பந்தமில்லை, திட்டமிட்டு காலதாமதம் படுத்தும் நோக்குடன் தங்களுக்கு கடிதம் அனுப்பி வைப்பதாக நெல்லை அரசு மருத்துவமனை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்மூலம் முறைகேடு நடந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போது இந்த விவகாரத்தில் முழு விவரங்களை தருவதோடு, தவறான தகவலைத் தந்த நெல்லை அரசு மருத்துவமனை தலைவர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்துள்ளேன். எனவே உரிய நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளேன்" என்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மோகன் கூறுகையில்

இதுகுறித்து நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மோகன் கூறுகையில், "கரோனா தாக்கத்தால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இந்த தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமையாக உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது ஒரு கரோனா நோயாளிக்கு உணவுக்காக 45 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அரசு மருத்துவனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, முறையான சுகாதாரம் கழிப்பிட வசதி ஏற்படுத்தவில்லை, 45 ஆயிரம் ரூபாய் பணம் முழுமையாக ஒரு நோயாளிக்கு செலவிடப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, வெளிப்படையான சிகிச்சை அளித்து பொதுமக்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் முத்துராமன் கூறுகையில்

இதுகுறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் கூறுகையில், "கரோனா பாதிப்பு குறித்த தகவல் மக்களிடம் பூதாகரமாக கொண்டு சேர்த்துள்ளனர். மக்களிடம் பீதியை ஏற்படுத்தி, மக்களின் பயத்தைக் காரணம் காட்டி கரோனா சிகிச்சையை வியாபாரமாக்கிவுள்ளனர். இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, நெல்லையைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் என்ற நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு நான்கு நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார். 7ஆம் தேதி அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் 3ஆம் தேதியே அனுமதிக்கப்பட்டதுபோல் பொய்யான சான்று வழங்குகின்றனர். இதுபோன்ற தொடர் முறைகேடுகள் நெல்லை அரசு மருத்துவனையில் நடைபெறுகிறது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையான சிகிச்சை அளிப்பதுடன் முறைகேடுகளைக் களைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதாவது பீதியை காரணம் காட்டி கரோனா சிகிச்சை வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எனவே, அரசு நெல்லை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை குறித்து வெளிப்படையான தகவலை அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:கலைநயத்துடனும் இயற்கையுடன் இயைந்த அமைப்புடனும் கட்டப்படும் வீடு: அசத்தும் ஆடிட்டர்!

Last Updated : Oct 27, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.