ETV Bharat / state

தாமிரபரணியின் அவலநிலைக்கு தீர்வு காணப்படுமா? - தாமிரபரணி

திருநெல்வேலி: "அமலை செடிகள் மற்றும் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அழகு இழந்து வரும் தாமிரபரணி ஆற்றினா தூர்வாரி மீட்க வேண்டும்" என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

tirunelveli
author img

By

Published : Jun 3, 2019, 5:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் கோடைக் கால வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடித்து வருகிறது. இதனால், பிரதான அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியில் நீரோட்டம் மிகவும் குறைந்து தரைமட்டத்தில் காணப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள முருகன் கோவில் என்ற பகுதியில் தாமிரபரணி நதியானது நதியே தெரியாத அளவிற்கு முழுவதுமாக அமலை செடிகளாலும், குப்பைகளாலும் நிரம்பி காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகம் அருகிலே இவ்வாறு இருக்க, வேறு பகுதிகளில் உள்ள நதியின் நிலை இதைவிட மோசமாக உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,"தாமிரபரணி நதியினை காப்பாற்றும் நோக்கத்தில் தாமிரபரணி மீட்புக் குழு என்று அமைத்து பாபநாசத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ஆற்றினை தூர்வாரி ஆற்றின் இருபக்கங்களிக்கும் மரம் வளர்த்தனர். ஆனால் தற்போது தாமிரபரணி நதி எங்கு இருக்கின்றது என்று தேடும் நிலையில் தான் உள்ளது. ஆற்றை பாதுகாத்தால் மட்டுமே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்" என்றனர்.

அமலை செடிகள் மற்றும் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தாமிரபரணி நதி, பல மாதங்களாக தூர்வாரப்படாததினால் பொதுமக்கள் வருத்தம். மீண்டும் தாமிரபரணி மீட்புக் குழு செயல்படுமா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி...

தமிழகம் முழுவது இந்த கோடைகால வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த வெயில் காலத்தில் தமிழகம் முழுவது பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் இருந்து சுமார் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடித்து வருகின்றது. இதனால் திருநெல்வேலியில் பிரதான அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியில் நீரோட்டம் மிகவும் குறைந்து தரைமட்டத்தில் காணப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தாமிரபரணி நதி பல்வேறு பகுதிகளில் குப்பைகளாலும் அமலை செடிகளாலும் ஆக்கிரமிக்கபட்டு காட்சியளிக்கின்றது. இதனால் நீர் மாசு படுவதோடு நீரில் துர்நாற்றமும், நீர் சுவையே மாறிவிட்டது என்கின்றனர் பொதுமக்கள். இதில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள முருகன் கோவில் என்ற பகுதியில் தாமிரபரணி நதியானது நதியே தெரியாத அளவிற்கு முழுவது அமலை செடிகளும் குப்பைகளும் நிரம்பி காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகம் அருகிலே இவ்வாறு இருக்க வேறு பகுதிகளில் நதியின் நிலை என்ன என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

குறைந்த அளவே நீர் நதியில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அமலை செடிகள் நீர் ஆவி அகுவதை தடுத்தாலும் இவ்வாறு குப்பையாக இருப்பதினால் நீர் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விடுகிறது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

"இதற்கு முன்பு இங்கிருந்த ஆட்சித் தலைவர் தலைமையில் தாமிரபரணி நதியினை காப்பாற்றும் நோக்கத்தில் தாமிரபரணி மீட்புக் குழு என்று அமைத்து பாபநாசத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ஆற்றினை தூர்வாரி ஆற்றின் இருபக்கங்களிக்கும் மரம் வளர்த்தனர் ஆனால் தற்போது தாமிரபரணி நதி எங்கு இருக்கின்றது என்று தேடும் நிலையில் தான் தாமிரபரணி உள்ளது. எனவே ஆற்றை பாதுகாத்தால் மட்டுமே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்" என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

நெல்லை மாவட்டம் முழுவதும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூர்வாரி தூய்மை படுத்தி நதியினை காக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பேட்டி: ராஜிவ், சுற்றுச்சூழல் ஆர்வலர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.