திருநெல்வேலி: சிவராம் கலைக்கூடத்தில் பயின்றுவரும் மாணவர்கள் அவ்வபோது சமூக விழிப்புணர்வு தொடர்பான ஓவியங்களை வரைந்து வருகின்றனர். குறிப்பாக கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஓவியங்களை வரையப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சிவராம் கலைக்கூடத்தின் மனைவியான சாசா பார்த்திபன் இன்று(நவ. 12) ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட துணியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேருவின் உருவப்படத்தையும், கரோனா விழிப்புணர்வுக்காக தனித்திரு, விழித்திரு என்ற வாசகத்தையும் எழுதி அசத்தியுள்ளார்.
அதேபோல் அனைவரும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம் என்ற வாசகத்தையும் துணியில் எழுதியுள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் மாணவியை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவி சாசா பார்த்திபன் கூறுகையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேருவின் உருவப்படத்தை வரைந்துள்ளேன். கரோனா தொற்றிலிருந்து இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தனித்திரு, விழித்திரு என்ற வாசகத்தை எழுதியுள்ளேன். மேலும் தீபாவளி பண்டிகையை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் 'வெடிக்கு பதிலாக செடி' என்ற தலைப்பில் பசுமை தீபாவளி