ETV Bharat / state

சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்: ஆட்சியரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு! - indira nagar girl murder case

திருநெல்வேலி: சாத்தான்குளம் 7 வயது சிறுமி மரணம் தொடர்பான வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அச்சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

seven-year-old-girl-body
seven-year-old-girl-body
author img

By

Published : Jul 17, 2020, 5:05 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் சேகர்-உச்சிமாகாளி தம்பதி. அவர்களது 7 வயது மகள் ஜூலை 15ஆம் தேதி ஊருக்கு வெளியே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரர், நந்தீஸ்வரன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். மேலும் சிறுமியின் உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சிறுமியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று(ஜூலை 17) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமியின் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையில் சிறுமியின் குடும்பத்திற்கு 8.15 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவர்களது வீட்டிற்கு பட்டாவும் வழங்குவதாக உறுதியளித்தார்.

சிறுமியின் உடல் பெறப்பட்ட போது...

அதனால் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமியின் உடலைப் பெற்றுக்கொண்டனர். மேலும் சிறுமியின் உடல் அடக்கம் செய்ய இந்திரா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க: நெல்லையில் 7 வயது சிறுமி கொலை: உடலை வாங்க விசிக மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.