தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
சென்ற ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் கல்வீச்சு, கடையடைப்பு , உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென் மண்டல ஐஜி உத்தரவின் பேரில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணியளவில் செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
இதில் 36 விநாயகர் சிலைகள் இடம்பெற்றன, போலீசாரின் தீவிர முயற்சியால் பதட்டமான பகுதி என அறியப்பட்டுள்ள பள்ளிவாசல் தெரு, கம்போஸ் ரோடு, பெரியசாமி தெரு வழியாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் கடந்து வந்தது ஊர்வலம் முடிந்தது. அதன்பிறகு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.36 சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் கரைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஊர்வலம் நடந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டடார். இரவு பகல் பாராமல் உழைத்து இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் நடத்திக் கொடுத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.