ETV Bharat / state

ஜாதி பார்த்து வாக்களிக்க வேண்டாம் - சீமான் - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜாதியைப் பார்த்து யாரும் வாக்களிக்க வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சாதி பார்த்து வாக்களிக்க வேண்டாம்
சாதி பார்த்து வாக்களிக்க வேண்டாம்
author img

By

Published : Oct 2, 2021, 10:21 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் வருகின்ற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

தேர்தல் பரப்புரை நிறைவடைய இன்னும் 2 நாள்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

சாதி பார்த்து வாக்களிக்க வேண்டாம்

அப்போது பேசிய அவர், "ஜாதியைப் பார்த்து எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். நாம் தமிழர் என்று நினைத்து வாக்களித்தால் போதும். தமிழனுக்கு எந்த பெருமையும், அடையாளமும் இருக்கக் கூடாது என திராவிட கட்சியினர் நினைக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 7 விழுக்காடு கிடைத்துள்ளது. ஒற்றுமையாக இருந்து வாக்களித்திருந்தால் 10 விழுக்காடு வரை பெற்றிருக்கலாம். தொடர்ச்சியாக தோற்கடித்தவர்கள் நம்மைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த காலம் விரைவில் வரும்" என்றார்.

இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.