ETV Bharat / state

மணலில் வ.உ.சி.யின் உருவத்தை வரைந்து அசத்திய சிறுமிகள் - School girls draw voc using sand in Tirunelveli

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை மணலில் இரண்டு சிறுமிகள் வரைந்து அசத்தியுள்ளனர்.

voc
வ.உ.சி
author img

By

Published : Sep 3, 2021, 6:32 PM IST

விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் விழா வரும் 5ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், நெல்லை சிவராம் கலைக்கூடம் சார்பில் அங்கு பயிலும் இரண்டு மாணவிகள் மணலில் வ.உ.சி. உருவத்தை வரையும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்துஜா செல்வி, தீக்சனா ஆகிய இருவரும், வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 150 சதுர அடி அளவுள்ள வெள்ளை நிற துணியில் கலர் மணலைக் கொண்டு வ.உ. சிதம்பரனாரின் உருவத்தை வரைந்தனர்.

வ.உ.சி.யின் உருவத்தை வரைந்து அசத்திய சிறுமிகள்

இதற்கு எம்-சாண்ட், ஆற்று மணல், செம்மண் ஆகிய மூன்று மணல்களை மாணவிகள் பயன்படுத்தினர். இது குறித்து இந்துஜா செல்வி நம்மிடம் கூறுகையில், "கரோனோ காலத்தில் சிவராம் கலைக்கூடத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

தற்போது வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மணலைக் கொண்டு அவரது உருவத்தை வரைந்துள்ளோம். நான்கு நாள்களில் இந்த ஓவியத்தை நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய மாணவி தீக்சனா, "ஏற்கனவே கடந்தாண்டு வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளின்போது செக்கிழுத்தச் செம்மல் என்பதைக் குறிக்கும் வகையில் செக்கு எண்ணெய்யைக் கொண்டு அவரது உருவத்தை வரைந்தேன்.

தற்போது வ.உ.சி. மண்ணின் மைந்தர் என்ற முறையில், மூன்று வகையான மணலைக் கொண்டு அவரது உருவத்தை வரைந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வ.உ.சியின் 150ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் அறிவித்த 14 அறிவிப்புகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.