ETV Bharat / state

பள்ளியில் தகராறு; மாணவி முதல் மாடியில் இருந்து விழுந்து படுகாயம்! - திருநெல்வேலி அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு

திருநெல்வேலி அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவி முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

பள்ளியில் தகராறு; மாணவி முதல் மாடியில் இருந்து விழுந்து படுகாயம்!

author img

By

Published : Feb 18, 2022, 9:21 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று (பிப்ரவரி 17) ராதாபுரம் அருகே உள்ள பட்டார்குளத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி சுகுனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதலாவது மாடியில் உள்ள சக தோழியைப் பார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது மற்றொரு மாணவிக்கும் சுகுனாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் முதல் மாடியிலிருந்து தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

காயம் அடைந்த மாணவி சுகுனாவை பள்ளி ஆசிரியர்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்து விட்டு, மாணவியின் பெற்றோர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குப் ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் சண்டை போட்டதில் தள்ளி விடப்பட்டரா அல்லது தவறி விழுந்தாரா என்று ராதாபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய 'சிங்கம்' பட நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.