ETV Bharat / state

'கரோனா பரவலால் இடம் மாறிய காய்கறி சந்தை’ - வாடிக்கையாளர்களை இழந்து தவிக்கும் வியாபாரிகள்! - காய்கறி சந்தை இடமாற்றம்

கோயம்பேடு சந்தையில் ஏற்பட்டதுபோல திருநெல்வேலியில் கரோனா சமூக பரவலாக மாறிவிடக்கூடாதென திருநெல்வேலி மாநகராட்சி அலுவலர்கள் கவனமாகச் செயலாற்றுகின்றனர்.

வியாபாரிகள்
வியாபாரிகள்
author img

By

Published : Jul 27, 2020, 5:39 PM IST

சந்தைக்கு நேரடியாகச் சென்று நல்ல காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கவே பெண்கள் விரும்புவார்கள். தற்போது ஏற்பட்டுள்ள கரோனா நெருக்கடி பெரும்பாலான ஆண்களையும் சந்தைக்கு வரவழைத்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனோ பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த கரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில் நெல்லையில் முக்கிய காய்கறி சந்தையான நேதாஜி சுபாஷ் காய்கறி மார்க்கெட், டாக்டர் எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

இதே சந்தை மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது தனியார் பள்ளி மைதானத்தில் இயங்கிவருகிறது. தொடர்ச்சியான இடமாறுதல்களினால் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. முன்னதாக இந்த சந்தையில் வெளிமாவட்டங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறு வியாபாரிகளுக்கு இதுவே முக்கிய சந்தை. ஆனால் தொடர்ச்சியான இடமாறுதல்களால் வியாபாரிகள் துவண்டு போயினர்.

இது குறித்து வியாபாரி ஆறுமுகம், “கூட்ட நெரிசல் காரணமாக நெல்லை டாக்டர் எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையத்திற்கு சந்தையை இடமாற்றினர். அங்கு காய்கறி விற்பனை தொடர்ச்சியாகச் செய்யப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 3 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி 10 நாட்களுக்கு அங்கு செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டை மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டனர். தற்போது தனியார் பள்ளி மைதானத்தில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மக்கள் பெரும்பாலும் காய்கறிகள் வாங்க வருவதில்லை” என்றார்.

மாநகராட்சி அலுவலர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். கோயம்பேடு சந்தையில் ஏற்பட்டதுபோல திருநெல்வேலியில் சமூக பரவல் ஏற்பட்டுவிடக்கூடாதென கவனமாகச் செயலாற்றுகின்றனர். இது குறித்து வியாபாரி நாராயணன் கூறுகையில், “மாநகராட்சி ஊழியர்களை குறை சொல்லமுடியாது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன. முகக்கவசம் அணியாவிட்டால் உடனடி அபராதம் என தடாலடியாக செயல்படுகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் மழை நேரங்களில் பிழைப்பு நடத்தமுடியாது. மழையில் காய்கறிகளை பாதுகாக்க போதிய வசதியில்லை. ஓட்டல்களை நம்பிதான் நாங்கள் காய்கறிகளை மொத்த வியாபாரம் செய்துவருகிறோம். ஆனால் இப்போது ஓட்டல்கள் அந்தளவில் செயல்படவில்லை” என்றார்.

மற்றொரு வியாபாரி மணி கூறுகையில், ”சந்தையின் இடமாற்றத்திற்கு பிறகு வியாபாரம் ரொம்ப சுமாராக உள்ளது. வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை ஒருநாள் பறிக்காவிட்டாலும் முற்றிவிடும், இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சரக்கை எடுத்து வருவதில் சிக்கல் இல்லை. அதை விற்பதில்தான் சிக்கல். மாநகராட்சி ஏற்பாடுகளை செய்தாலும் வாடிக்கையாளர்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே” என்றார் தோய்ந்த குரலில்.

வாடிக்கையாளர்களை இழந்து தவிக்கும் வியாபாரிகள்!

இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”கரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான காய்கறி சந்தை தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கை. ஏற்கனவே வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். வரும் காலங்களில் கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: காய்கறி சந்தை வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.