தமிழ்நாடு முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் வெப்பம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 100 டிகிரிக்கும் குறையாமல் வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று மாலை இடி மின்னலுடன் மாநகரில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடைகால வெப்பத்தின் இடையே இன்று குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் நெல்லையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லையில் இடியுடன் கூடிய மழை! - tirunelveli
திருநெல்வேலி: நெல்லையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.