நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த உதயராஜ் (19). இவர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக் கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இன்று அதிகாலை அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தப்பியோடிய விசாரணைக் கைதியைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.