ETV Bharat / state

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி - Nellai

நெல்லை:  சீவலப்பேரி பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அங்குள்ள 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி
author img

By

Published : Jul 7, 2019, 4:59 PM IST

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை அடுத்து அமைந்துள்ளது பர்கிட் மாநகரம். இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. சகல வசதிகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையின் நிலை தற்போது மிகவும் மோசமானதாக இருக்கிறது.

மருத்துவர்கள் இல்லாமல் அங்கிருக்கும் ஒரு செவிலியர் மட்டும் இங்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார். அதிலும் காய்ச்சல், தலைவலி போன்ற சில நோய்களுக்கு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மற்ற நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி கிராமத்திலும் இதேபோல் மருத்துவர்கள் இல்லாததால் தாயும் சேயும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி

இதனால் அவசரக் காலங்களில் 15 கிலோமீட்டர் சுற்றி மேடு பள்ளமான சாலைகளைக் கடந்துதான் சிகிச்சைக்குச் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:நெல்லை மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் ஆரம்ப சுகாதார நிலையம் 19 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேறுவழியில்லாமல் 15 கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் சென்று மருத்துவம் பார்க்கும் அவல நிலை.

Body:நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அடுத்து அமைந்துள்ளது பர்கிட் மாநகரம் இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் மேலும் இந்த கிராமத்தை சுற்றி 19 சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன அனைத்து கிராமங்களுக்கும் இது தான் மையப் பகுதியாக அமைந்துள்ளது இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது 3 செவிலியர்கள் இரண்டு மருத்துவர்கள் உதவியாளர்கள் என 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் இங்கேயே தங்கி பணி செய்வதற்காக இங்கு அவர்களுக்காக அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்வதற்காக இங்கேயே ஒரு ஆம்புலன்ஸ் எப்பொழுதும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது இப்படி சகல வசதிகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவ மனையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது, மூன்று செவிலியர்கள் இருந்து வந்த இந்த மருத்துவமனையில் தற்போது ஒரு செவிலியர் மட்டும் பணியில் உள்ளார் மேலும் ஒரு பெண் மருத்துவர் மட்டும் தற்போது பணிகள் அமர்ந்து உள்ளார் ஆனால் அவர் இந்த மருத்துவமனைக்கு வருவது கிடையாது அவசரமாக சிகிச்சை தேவைப்படும் பொழுது இவருக்கு மருத்துவ பணியாளர்கள் போன் செய்து வரசொல்கிறார்கள் அவர் வருவதற்கு காலதாமதம் ஆகும் போது நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை தான் அதிகமாக உள்ளது மருத்துவர்கள் இல்லாமல் அந்த ஒரு செவிலியர் மட்டும் இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் அதிலும் காய்ச்சல் தலைவலி போன்ற சில நோய்களுக்கு மட்டும் இங்கு மருந்து, மாத்திரைகள் உள்ளன இரத்தக் கொதிப்பு , சுகர், இருதய நோய் போன்ற பல நோய்களுக்கு இங்கு மாத்திரை வசதிகள் எதுவும் இல்லை இதனால் நோயாளிகள் இங்கு இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் , இங்குள்ள ஆம்புலன்ஸ் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத ஒரு அவல நிலையில் தான் தற்போது உள்ளது பர்கீட் மாநகரம் மட்டுமின்றி இதை சுற்றி உள்ள 19 கிராம மக்களும் இந்த மருத்துவமனைக்கு வந்து தான் சிகிச்சை பெற வேண்டும் ஆனால் மருத்துவமனையில் யாரும் இல்லாததால் எந்த வசதியும் இல்லாமல் இருப்பதால் தற்பொழுது ஆரம்ப சுகாதார நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி கிராமத்தில் இதேபோல் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததினால் ஒரு தாய் மற்றும் சேய் இறந்த சம்பவம் இங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர், இதேபோல் இன்னும் பல சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன இதற்கு முக்கிய காரணம் போதிய மருத்துவர்கள் இல்லாததும் மருத்துவர்கள் சரியான முறையில் பணிக்கு வராமல் இருப்பது தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு என்று 24 மணி நேரம் செயல் படும் தனி பிரசவவார்டுகள் இருந்தும் அது செயல்படாமல் உள்ளது அப்படியே பெண்கள் சிகிச்சைக்கு வந்தாலும் அவர்களுக்கு வழங்குவதற்கு போதிய மருந்து மாத்திரைகள் இல்லை என்றும் அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் , இந்த மருத்துவமனையில் உள்ள பல கட்டிடங்கள் செயல்படாமல் இடியும் தருவாயில் கிடப்பதாகவும் கழிப்பிட வசதிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் சமுக விரோத செயல்கள் இந்தபகுதியில் நடக்கிறது இது குறித்து அரசுக்கு தாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் தாங்கள் அவசர காலங்களில் 15 கிலோமீட்டர் சுற்றி மேடு பள்ளமான சாலைகளில் கடந்துதான் சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரும் சிகிச்சையும் மதிப்பும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் வேதனை அடைகின்றனர் இதுகுறித்து அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு இப்பகுதி மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவும் ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக செயல்படவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.