ETV Bharat / state

நெல்லையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலி: பயிற்சி காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து நெல்லை அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இன்று (ஜூன் 1) போராட்டம் நடத்தினர்.

நெல்லையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்
நெல்லையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Jun 1, 2021, 5:48 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிந்துவரும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்களுக்குப் பிற சிகிச்சைகள் குறித்து அனுபவம் கிடைத்திருக்காது என்ற அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசின் இந்த முடிவுக்குப் பயிற்சி மருத்துவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எனவே பயிற்சிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்றும், உடனடியாக தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் இன்று (ஜூன் 1) போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் முதல்நிலை பயிற்சி மருத்துவ மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு அமைதியாகக் கூடிநின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் கோரிக்கைகள்

அப்போது, அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் 'பணி நியமனம் வேண்டும், பயிற்சி நீட்டிப்பு வேண்டாம்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் கூறுகையில், "கரோனோ காலகட்டத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு சாரா முதுநிலை மாணவர்களின் மூன்று ஆண்டு படிப்பு காலம் மே மாதத்துடன் முடிகிறது. ஆனால், படிப்பு காலம் நிறைவுபெற்ற பிறகும் எங்களை மாணவனாக நீடிக்கச் சொல்லி அரசாணை பிறப்பிக்கபட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அரசு சார்ந்த மாணவர்களுக்கு எப்படி பணி நியமனம் வழங்கப்படுகிறதோ, அதேபோன்று எங்களுக்கும் கவுன்சிலிங் நடத்தி உரிய பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்.

நாங்கள் மனதளவிலும், உடலளவிலும் நிறைய கஷ்டத்தை அனுபவித்து உள்ளோம். மேலும், எங்களின் பணிச் சேவையை இரண்டு ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாக குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.