ETV Bharat / state

காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.60 லட்சம் பணம்: ஹவாலா பணமா என போலீஸ் விசாரணை! - ஹவாலா பணம்

திருநெல்வேலி: வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், நேற்று (அக்.07) நள்ளிரவில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.60 லட்சம் பணம்

author img

By

Published : Oct 8, 2020, 10:28 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை குறைக்கவும், பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிப்பதற்காகவும் அவ்வபோது ‘ஷாமிங் ஆப்ரேஷன்’ என்ற பெயரில் காவல் துறையினர், சிறப்பு சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்றிரவு (அக்.07) நெல்லை ஜங்ஷன், டவுன் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர், தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, இன்று (அக்.08) அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது, அதில் 60 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இரவு நேரத்தில் இவ்வளவு அதிக தொகை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள், இந்த பணம் என்ன வகையில் கொண்டுவரப்பட்டது என காவல் துறையினர், காரில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர்.

அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த காவல் துறையினர், 60 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததுடன், காரிலிருந்த நான்கு நபர்களையும் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஆவணங்கள் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் என நான்கு பேரும் தெரிவித்துள்ளதால், இறுதிக்கட்ட விசாரணைக்குப் பிறகே அந்த பணம் ஹவாலா பணமா அல்லது தொழில் வகைக்காக எடுத்துச்செல்லப்பட்டதா எனத் தெரியவரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நூதன முறையில் உயர் ரக கேமரா திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.