ETV Bharat / state

விவசாயி தலையில் கல்லைப் போட்டுக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை!

திருநெல்வேலி: நடுவக்குறிச்சி அருகே வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த விவசாயி தலையில் கல்லைப் போட்டுக் கொலைசெய்த குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

தூங்கிக்கொண்டிருந்த நபர் தலையில் கல்லை போட்டு கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!
Police investigate about murder case
author img

By

Published : Oct 24, 2020, 4:51 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகேவுள்ள உடையார் குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரமசிவன் (48). இவருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், அவர் நேற்றிரவு (அக். 23) வீட்டின் பின்பக்கமுள்ள இடத்தில் வெட்ட வெளியில் கட்டில் போட்டுத் தூங்கியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பரமசிவன் மீது கல்லைப் போட்டும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.

காலையில் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது கணவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.