திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமம் முன்பு மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தது. பின்பு, தென்காசியை புதிய மாவட்டமாக பிரித்த பிறகு மானூர் ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்துள்ளது.
எங்கள் ஊராட்சியின் மேல இலந்தைகுளம் பகுதியில் 2ஆயிரத்து300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு சுத்தமல்லி அருகே உள்ள பலவூர் அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், அதை முறையாக செய்யாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் பள்ளி மாணவர்கள், பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், பொதுமக்களே பணம் வசூல் செய்து தங்களுக்கென குடிநீர் குழாய்களை பதித்துள்ளனர். இருந்தபோதிலும், ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை. குடிநீருக்காக தொலை தூரம் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கு தண்ணீர் வசதியை முறையாக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம பெண்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ‘பெண்களின் வளர்ச்சிக்காக 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும்’