ETV Bharat / state

நெல்லையில் வயதான தம்பதியினர் சடலம் மீட்பு! - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: இளந்தோப்பு பகுதியில் சடலமாகக் கிடந்த வயதான தம்பதியினர் உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வயதான தம்பதியினர்
வயதான தம்பதியினர்
author img

By

Published : Sep 24, 2020, 4:34 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த இளந்தோப்பு பகுதியில் இன்று (செப். 24) வயதான தம்பதியினர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு உடனே இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற நாங்குநேரி காவல் துறையினர் வயதான தம்பதியினரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து விசாரித்தபோது அந்தத் தம்பதியினர், இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மூக்கன் (70), அவரது மனைவி செல்வமணி (61) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 20) வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் சொத்து, கடன் பிரச்னை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் கடத்தல் விவகாரம்: 5 காவலர்கள் இடைநீக்கம் செய்து எஸ்.பி. ‌அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.