கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாத திடீர் ஊரடங்கால் வேலை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மாநகர பகுதிகளில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், சாலையோரங்களில் பணிபுரியும் ஏராளமான வட மாநிலத்தவர்களை பகுதிவாரியாக கணக்கெடுத்த காவல்துறையினர், அவர்களுக்கு காய்ச்சல், தொற்று ஏதேனும் உள்ளதா என சுகாதாரத்துறையினர் உதவியுடன் பரிசோதனை செய்தனர்.
இதற்காக, உணவகங்களின் நிர்வாகத்தினரால் அவர்கள் சமூக இடைவெளியின்றி உணவு கொண்டு செல்லும் வாகனத்தில் மொத்தமாக அடைத்து அழைத்து வரப்பட்டனர். சோதனைக்கு பின்னர் காவல்துறையினர், சுகாதார துறையினர் எச்சரித்ததின் பேரில் ஐந்து ஐந்து பேராக அழைத்து சென்றனர்.
இதையும் பார்க்க: கரோனா குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி!