கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவம், திருமணம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலில் இருக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் இ-பாஸ் பெற்று செல்வோருக்கு புதிய நடைமுறையை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, இ-பாஸ் பெற்று செல்வோர் ஊர் திரும்பி நெல்லை மாவட்டத்திற்குள் வந்த பின்பு, தங்களை தாங்களே கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று அதிகம் பாதித்த ரெட் அலெர்ட் மாவட்டம் என்பதனால் நோய் தொற்றின் பரவலை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பார்க்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?