ETV Bharat / state

நகைக்காக மாமியாரை கொன்ற மருமகன் - Murder

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 13 பவுன் நகைக்காக மாமியாரைக் கொன்ற மருமகன் உள்பட 4 பேரை மூலைக்கரைப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ட்ஃப்ச
ட்ஃப்ச
author img

By

Published : Jul 18, 2021, 2:58 AM IST

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரை அடுத்த ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் வடிவு (65) இவருக்கு மகன் திருமலைநம்பி(36) மகள்கள் பரமேஸ்வரி (33) வேலம்மாள் (32) ஆகிய 3 பேர் இருக்கின்றனர். வடிவு அதே பகுதியில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அடுத்த தெருவில் மகன் திருமலை நம்பியும், மகள் வேலம்மாளும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பரமேஸ்வரி கணவர் கல்லத்தியான் (37) மற்றும் குடும்பத்தினருடன் பாளை அருகே உள்ள நடுவக்குறிச்சியில் வசிக்கிறார். கடந்த 13ஆம் தேதி வடிவு திடீரென மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். வடிவு ஏற்கனவே அவ்வப்போது உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததால் அதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என நம்பிய குடும்பத்தினர் உறவினர்களுக்கு தகவல் சொல்லி குலவழக்கப்படி இறுதி சடங்குகள் செய்து அங்குள்ள சுடுகாட்டில் முறையாக எரித்துள்ளனர்.

அதன்பின் வடிவு அணிந்திருந்த நகைகளை சரிபார்க்கும் போது கம்மல், செயின் உள்ளிட்ட 13 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலைநம்பி நகைகளைத் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனிடையே 12ஆம் தேதி இரவு சிலர் வடிவு வீட்டிற்கு வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் பரமேஸ்வரனும் ஒருவர் என்பது தெரிந்தது.

இதனை அடுத்து அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மாயமான நகைகள் குறித்து குடும்பத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து திருமலை நம்பி மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் கல்லத்தியானைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்ட கல்லத்தியான் தன்னுடன் வந்த கூலிப்படையினர் சிலருடன் சேர்ந்து வடிவு முகத்தில் தலையணையைப் போட்டு அழுத்தி கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்றதாக தெரிவிததார். இதனை தொடர்ந்து கல்லத்தியானைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவருக்கு உடந்தையாக கூலிப் படையாக செயல்பட்ட பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிராஜா(26) கீழநத்தம் செல்லத்துரை மகன் மூர்த்தி(29) ஜேம்ஸ் மகன் அந்தோணி (32) ஆகியோரை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.