இது குறித்து தெரிவித்துள்ள நெல்லை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் , திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும். அதுமட்டுமின்றி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் காவல் துறையினர் மீதும் கடும் நடவடிக்கை பாயும்” என்றார்.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த மாதம் நாங்குநேரியில் புதிய ரோந்து பணியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் குற்ற செயலை தடுக்கும் வகையில் பல்வேறு வழக்குகளில் சிக்கி, ஜாமீனில் உலா வரும் குற்றவாளிகளை அதிகளவில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்துள்ளார். தொடர்ந்து மணல் திருட்டை தடுக்க அவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மணல் மாபியாக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் ரத்து; எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் - சென்னை ஆணையர்