ETV Bharat / state

நெல்லை கல்குவாரி விபத்து: பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்! - continuous falling rocks

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியின்போது பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்துள்ள்னர்.

நெல்லை கல்குவாரி விபத்து: பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

author img

By

Published : May 16, 2022, 5:14 PM IST

நெல்லை மாவட்டம், தருவை அடுத்த அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்ட நிலையில் முருகன், விஜய் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் என்ற மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், சிறிதுநேரத்தில் சிகிச்சைப் பலன் இல்லாமல் இறந்துவிட்டார்.

தொடர்ந்து மீதமுள்ள ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் மற்றொரு நபரான முருகன் ஆகிய 3 பேரை மீட்கும் பணிகள் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரால் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விபத்து நடைபெற்ற கல்குவாரியில் சுற்றுப்புறம் உள்ள பாறைகள் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு, கற்கள் கீழே விழுவதால், மீட்புப்பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மீதமுள்ள மூன்று பேரில் ஒருவரது உடலை மட்டும் மீட்புக்குழுவினர் அடையாளம் கண்டனர்.

எனவே, அவரை மீட்பதற்காக முயன்றபோது திடீரென மீண்டும் பாறைகள் சரிந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மீட்புக் குழுவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதையடுத்து தற்காலிகமாக மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சம்பவ இடத்தில் நிலச்சரிவின் தன்மையைக் குறித்து கனிம வளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வுக்குப் பிறகு, இந்தப் பணிகள் தொடங்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : நெல்லை கல்குவாரி விபத்து - உயிர் பிழைத்தவரின் உருக்கமான பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.