ETV Bharat / state

மூத்தகுடிமக்களின் பாதுகாப்பிற்காக வேர்களைத் தேடி திட்டம் - அட்டகாசப்படுத்திய நெல்லை மாநகர காவல்துறை! - thirunelveli police

நெல்லை: மூத்தகுடிமக்களின் பாதுகாப்புக்காக நெல்லை மாநாகர காவல்துறையினர் வேர்களைத்தேடி என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

nellai police introduce the scheme to protect senior citizen
author img

By

Published : Oct 1, 2019, 11:35 PM IST

நெல்லை மாநகர காவல்துறையினர் மீம்ஸ்கள் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், ஏடிஎம் பாஸ்வேர்டைப் பாதுகாப்பது, பெண்களின் பாதுகாப்பு என ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுபோல முதியவர்களை பாதுகாக்க ஒரு புதிய திட்டம் ஒன்றையும் மாநகர காவல்துறை தொடங்கி உள்ளது. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக உதவும் வகையில் 'வேர்களைத் தேடி' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன் குமார் அபிநபு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் .

வேர்களைத் தேடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்தத் திட்டத்தின் நோக்கமாக மாநகரப் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளை கணக்கெடுத்து, அவர்களது வீட்டில் வேர்களைத் தேடி என்ற பட்டா புத்தகம் வைக்கப்படும்.

அவ்வாறு வைக்கப்படும் புத்தகத்தில் காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் அவர்களது தொலைபேசியில் KAVALAN SOS APP பதிவு செய்து தரப்படும்.

இதன் மூலம் அவர்கள் எளிதாக காவல் துறையை தொடர்பு கொள்ள முடியும். மேலும், சிசிடிவி பொருத்துதல், கிரில் பொருத்துதல், லாக்கர் வசதிகளைப் பயன்படுத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் " என்றார்.

தொடர்ந்து மூத்த குடிமக்கள் தொடர்பு கொள்ள 7449100100, 0462-2562651, 9498181200 என்ற தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

Intro:நெல்லை மாநகர காவல்துறையின் கட்டுபாட்டுக்குட்பட்ட பகுதிகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் பிரத்யேக கையேடான (வேர்களை தேடி) என்ற திட்டத்தினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன் குமார் அபிநபு IPS காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெளியிட்டு தொடங்கி வைத்தார்.Body:நெல்லை மாநகர காவல்துறையின் கட்டுபாட்டுக்குட்பட்ட பகுதிகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் பிரத்யேக கையேடான (வேர்களை தேடி) என்ற திட்டத்தினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன் குமார் அபிநபு IPS காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாநகர காவல்துறையினர் மீம்ஸ்கள் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், ஏடிஎம் பாஸ்வேர்ட்டை பாதுகாப்பது, பெண்களின் பாதுகாப்பு என பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என சமூக வலைத் தளங்களின் மூலம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர், இருப்பினும் நெல்லையில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது, மேலும் இன்று சர்வதேச வயது முதிர்ந்தோர் தினம் கொண்டாடப்படும் வேலையில் முதியவர்களை பாதுகாக்க ஒரு புதிய திட்டம் ஒன்றையும் மாநகர காவல்துறை தொடங்கி உள்ளது.. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக உதவும் வகையில் பிரத்யேக கையேடான "வேர்களை தேடி" என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன் குமார் அபிநபு IPS காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெளியிட்டு இன்று தொடங்கி வைத்தார். அதனை மூத்த குடிமக்கள் பெற்றுக் கொண்டனர், பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த திட்டத்தின் நோக்கமாக மாநகர பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களின் வீட்டுகளை கணக்கெடுத்து அவர்களது வீட்டில் வேர்களைத் தேடி என்ற பட்டா புத்தகம் வைக்கப்படும், சிசிடிவி பொருத்துதல், கிரில் பொருத்துதல், லாக்கர் வசதிகளை பயன்படுத்த அறிவுறுத்தல் போன்றவை செய்யப்படும், கொடுக்கப்படும் புத்தகத்தில் காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும், மேலும் அவர்களது தொலைபேசியில் KAVALAN SOS APP பதிவு செய்து தரப்படும், இதன் மூலம் எளிதாக காவல் துறையை தொடர்பு கொள்ள முடியும், அதே போல காவல்துறையினர் அடிக்கடி அவர்களை சந்திப்பதன் மூலம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பான உணர்வை பெறுவர், என்றும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) தெரிவித்தார். தொடர்ந்து மூத்த குடிமக்கள் தொடர்பு கொள்ள 7449100100, 0462-2562651, 9498181200 என்ற தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டு உள்ளது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.