நெல்லை: பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகன்கள் மகேஷ், லட்சுமண குமார் ஆவர். இவரது வீட்டிற்கு எதிரே உள்ள, மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்த பழனி, தனது மாமியார் வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில், வீட்டு முன்பு வைக்கோல் வைப்பதில் முத்துலட்சுமிக்கும் பழனியின் மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழனி 2011 பிப்ரவரி 27இல் மகேஷ், லட்சுமண குமார் ஆகியோரை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயற்சித்தார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு மகேஷ் உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பழனியை கைதுசெய்தனர். இந்த வழக்கு இன்று நெல்லை மாவட்ட கூடுதல் நீதிபதி கோகிலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் ராஜ பிரபாகரன் முன்னிலையாகி வாதாடினார்.
இதையும் படிங்க: 'மகாபாரத யுத்தத்தில் நாங்கள் பாண்டவர்கள்' - ராஜேந்திர பாலாஜி