தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி விவசாய பாசனத்திற்காக நெல்லை மாவட்டத்திலுள்ள கருப்பாநதி, அடவிநயினார் அணைகளை உதவி பொறியாளர் ஆனந்த் புதன்கிழமை திறந்துவைத்தார்.
அதன்பின் பேசிய அவர், சுமார் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் இருந்து நாளொன்றுக்கு பத்து கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்றார்.
மேலும். சுமார் ஆயிரத்து 500 விவசாய ஏக்கர் நேரடியாகவும் ஏழாயிரத்து 500 விவசாய ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறும் என்றும் உதவி பொறியாளர் ஆனந்த் தெரிவித்தார்.