ETV Bharat / state

மருந்து கொடுக்காமல் 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை.. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை! - ஆஞ்சியோ

Nellai govt hospital: நெல்லையில் நெஞ்சுவலி ஏற்பட்ட 17 வயது பள்ளி சிறுமிக்கு விநோத சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றி நெல்லை அரசு மருத்துவர்கள் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

nellai govt hospital
நெல்லை அரசு மருத்துவர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 7:54 AM IST

பிரைமரி ஆஞ்சியோபிஸ்ட் சிகிச்சை செய்து சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

திருநெல்வேலி: நெஞ்சுவலி ஏற்பட்ட 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளித்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இந்திய அளவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி உள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கூறுகையில், "தென்காசி மாவட்டம ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர், ஜஸ்டின்துரை. இவருக்கு 5வதாக பிறந்த 17 வயது பெண் குழந்தை விநோதினி, 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தலைவலி, நெஞ்சுவலி மற்றும் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 7ஆம் தேதி அன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும், நெஞ்சுவலி அதிகரித்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் இசிஜி எடுத்து பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் வேறுபாடுகள் கண்டறியப்பட்ட உடன், இதயவில் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் தலைமையிலான மருத்துவர்கள் தலைமையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அவருக்கு இருதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர், உடனடியாக மருத்துவக் குழுவினர் பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து, அவரது ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு நீக்கப்பட்டு சிறுமி காப்பாற்றப்பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தமும் சீராக உள்ளது. விநோதினி சிகிச்சைக்கு பின்பு நலமாக உள்ளார்” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “மாரடைப்பு ஏற்பட்டால் பாதிப்கப்பட்ட நபருக்கு கிராம்போ லைசிஸ் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, அதன் பின்பு ஆஞ்சியோ செய்யப்படும். ஆனால் சிறுமிக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்ததால், இந்தியாவிலேயே முதல் முறையாக மருந்து கொடுக்காமல் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

விநோதினிக்கு சிறப்பான சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நவ.9ஆம் தேதி தமிழகத்தில் லாரிகள் ஓடாது: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.