ETV Bharat / state

நெல்லையில் உணவுத் திருவிழா! - nellai district news

நெல்லையில் நடைபெற்ற பாரம்பரிய சரிவிகித உணவுத் திருவிழாவில் நவதானிய உணவு வகைகள் உள்பட 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சரிவிகித உணவுத் திருவிழா
சரிவிகித உணவுத் திருவிழா
author img

By

Published : Oct 24, 2021, 12:04 PM IST

நெல்லை : சரிவிகித உணவு இயக்கம் சார்பில் சத்தான உணவு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய மற்றும் சரிவிகித உணவுத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய உணவு வகைகளை பார்வையிட்டனர்.

இந்தக் கண்காட்சியில் நவதானியங்களால் செய்யப்பட்ட திணை முருக்கு , திணை லட்டு , கம்பு உப்புமா, சோளப் பனியாரம், ராகி பக்கோடா உள்ளிட்ட 20 வகைகளுக்கும் மேலான பாரம்பரிய உணவு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்பட்டது.

சரிவிகித உணவு வளாகம்

கண்காட்சியில் பாரம்பரிய உணவு வகைகள் ஒவ்வொன்றும் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்தும் செய்முறை விளக்கங்களும் வைக்கப்பட்டிருந்தன. காணி மலைவாழ் உற்பத்தி செய்யும் கிழங்கு வகைகள், தேன், அத்திப்பழம், கொட்டாம்புளி, மிளகு ஆகியவையும், இயற்கை உரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பாரம்பரிய நெல்விதைகள் ஆகியவையும் பார்வை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவு செயல்முறை குறித்து தொடங்கப்பட்டுள்ள யூடியூப் சேனல் சேவை தொடங்கப்பட்டது. மேலும், கல்லூரிகள், பள்ளிகளில் சரிவிகித உணவுமன்றம் என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது.

விழாவில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சரிவிகித உணவு வளாகம் என்ற சான்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

சரிவிகித உணவுத் திருவிழா

உணவு பரிசோதனை வாகனம்

பின்னர், ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடத்ப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக நெல்லை மருத்துவக்கல்லூரி சரிவிகித உணவு வளாகம் என்ற சான்றை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

உணவு பரிசோதனை வாகனம் தமிழ்நாட்டில் சென்னை, மதுரையில் மட்டும்தான் இயங்குகிறது. அந்த வாகனம் இன்று நெல்லை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

இதையும் படிங்க : பொள்ளாச்சி பாலியல் வழக்கு; 'பிரியாணி பர்ஸ்ட், பிரியாவிடை நெக்ஸ்ட்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.