ETV Bharat / state

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதிரடி காட்டிய நெல்லை மாநகராட்சி ஆணையர்! - நெடுஞ்சாலை துறையினர் அதிரடி நடவடிக்கை

நெல்லை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். அவர் எடுத்துள்ள நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதிரடி காட்டிய நெல்லை மாநகராட்சி ஆணையர்-சிவ கிருஷ்ணமூர்த்தி

author img

By

Published : Jun 8, 2022, 10:29 PM IST

நெல்லை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் ஆக்கிரமிப்புகள் நிறைந்ததாகவே உள்ளது. அகற்றப்பட்டாலும் அரசியல் செல்வாக்கு காரணமாக ஆக்கிரமிப்பது தொடர்கதையாகவே உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கும் பொதுப்போக்குவரத்து பெரும் இடையூறு உள்ளதாகப் புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் இன்று(ஜூன்08) நெல்லை - வண்ணாரபேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நெடுஞ்சாலைத்துறை சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

அப்போது சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருப்பதற்காக இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.

அதுபோல அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்த விஷ்ணு சந்திரன் சமீபத்தில் மாற்றப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மாநகரின் முக்கியப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர் எடுத்துள்ள நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதிரடி காட்டிய நெல்லை மாநகராட்சி ஆணையர்-சிவ கிருஷ்ணமூர்த்தி

இதையும் படிங்க:விபத்து நேரிட்ட கல்குவாரியில் ஆய்வு பணிகள் விரைவில் முடிக்கப்படும்: நெல்லை மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.