ETV Bharat / state

'234 தொகுதியிலும் டெபாசிட் இழப்பார் ரஜினி '- நாஞ்சில் சம்பத் - nanjil sampath

ஒருவேளை ரஜினி கட்சித் தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டால் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

nanjil sambath
'234 தொகுதியிலும் டெபாசிட் இழப்பார் ரஜினி '- நாஞ்சில் சம்பத்
author img

By

Published : Dec 6, 2020, 10:49 PM IST

திருநெல்வேலி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நீதி பாதுகாப்பு நாள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், " சமூக நல்லிணக்கத்துக்கு ஆணி அடித்த நாள் இந்த நாள்.

டிசம்பர் 31ஆம் தேதி புதிய கட்சி தொடங்கப் போவதாக டிசம்பர் 3ஆம் தேதி நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். 28 நாள் இடைவெளி எதற்கு என்ற கேள்வி எழுகிறது. கட்சி தொடங்குவதற்கு முன்பே நிர்வாகிகளை அறிவிக்கும் முட்டாள்தனத்தை எங்கே சென்று முறையிடுவது என்றும் தெரியவில்லை.

'234 தொகுதியிலும் டெபாசிட் இழப்பார் ரஜினி '- நாஞ்சில் சம்பத்

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜக கட்சியின் அறிவுசார் அணித் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். இதுபோன்று, வாடகை மனிதர்களை வைத்து கட்சியை வழி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

40 ஆண்டுகளாக அவரை நம்பி இருந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிக்க ரஜினிக்கு மனம் வரவில்லை.

பாஜக கட்சியில் இருந்து ஒருவரை ஒருங்கிணைப்பாளராக நியமித்து இருக்கிறார் என்றால் பாஜக என்னும் பாசிச கட்சியின் கட்டளைக்கேற்ப அவர் கடமை ஆற்றுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் பாஜக, ரஜினியை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. ரஜினி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை இல்லை.

அண்ணாத்த படத்தை ஓட்டுவதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒருவேளை ரஜினி தேர்தலில் போட்டியிட்டால் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இது போன்ற ஒரு போராட்டத்தை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை. இந்தப் போராட்டம் மூலம் இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'பிறந்த நாளன்று வீட்டுக்கு வர வேண்டாம்'- ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.