ETV Bharat / state

வாகனங்களை நிறுத்தி வைத்தவர்களுக்கு வந்த சோதனை! - பல அடுக்கு வாகன காப்பகம் கட்டும் பணி

நெல்லை: வேய்ந்தான் குளம் பேருந்து நிலையத்தில் பல அடுக்கு வாகன காப்பகம் கட்டும் பணி தொடங்க இருப்பதால் பணி நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்கள் இரண்டு தினங்களில் கட்டணத்தை செலுத்தி எடுத்துச் செல்லுமாறு மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Vehicle stand
Vehicle stand
author img

By

Published : May 17, 2020, 2:11 AM IST

Updated : May 17, 2020, 2:19 AM IST

திருநெல்வேலி பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் வாகன காப்பகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன காப்பகமாக ரூ. 11.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் மாநகராட்சியின் சார்பில் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்தச் சூழலில் வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை, உரிமையாளர்கள் உரிய கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்ல மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

குறிப்பாக இரண்டு தினங்களுக்குள் அந்த வாகனங்களை எடுத்துச் செல்ல மாநகராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்துள்ளது. பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் நீண்ட காலமாக எடுக்கப்படாத வாகனங்கள் பழுதடைந்த நிலையில் குவிந்து கிடக்கின்றன.

மேலும் இருசக்கர வாகனங்களைப் போன்று நான்கு சக்கர வாகனங்களும் காப்பகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவைகளை உரிமையாளர்கள் உரிய நேரத்தில் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: பல இடங்களிலிருந்து 3400 லிட்டர் கள்ளச்சாராயம்... வளைத்துப் பிடித்த காவல்துறை!

Last Updated : May 17, 2020, 2:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.