ETV Bharat / state

நெல்லை அருகே கல்குவாரியில் மூழ்கி தாய், குழந்தை பலி! - Child s body recovered from Kalquarie pond

நெல்லை சமூகரெங்கபுரம் அருகே உள்ள கும்பி குளத்தில் உள்ள செயல்பாட்டில் இல்லாத கல்குவாரி குட்டையில் தாய் வளர்மதியும், 4 மாத கைக்குழந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய், பச்சிளம் குழந்தை கல்குவாரி குட்டையில் மூழ்கி பலி!

author img

By

Published : Feb 22, 2023, 8:09 PM IST

தாய், பச்சிளம் குழந்தை கல்குவாரி குட்டையில் மூழ்கி பலி!

நெல்லை: சமூகரெங்கபுரம் அருகே உள்ள கும்மி குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன், அதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வளர்மதி 27. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இரண்டாவது குழந்தை வசந்திரா. வளர்மதி சற்று மனநலப் பிரச்சனையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வளர்மதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக ராதாபுரம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளர்மதியைத் தேடி வந்தனர். மேலும், பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இருவர் குறித்துக் காணவில்லை என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

இதனிடைய இன்று(பிப்.22) அதிகாலை சமூகரெங்கபுரம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குழந்தையின் உடலும், வளர்மதியின் உடலும் மிதப்பதைப் பார்த்து ராதாபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வள்ளியூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தீயணைப்பு படையினர் உடலை இருவரது உடலையும் மீட்டனர்.

அதன் பின்னர், உடலை ஆய்வு செய்தபோது சடலமாக கிடந்த வளர்மதி மற்றும் அவரது குழந்தை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராதாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கல்குவாரி குட்டையில் விழுந்து வளர்மதி குழந்தையுடன் தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இருவரும் குட்டையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் காதலி மீது கல்லைப் போட்டுக் கொலை.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்ட நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.