தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டத்தில் புதிதாக அமையவிருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து துறை அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்டவை நகர எல்லை பகுதிக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், இந்தியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, வியாபாரிகள் சங்கத்தினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஆயிரம் பேரி பகுதியில் அமையவிருக்கும் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தென்காசி நகர எல்லைக்குள் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: