ETV Bharat / state

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜலட்சுமி - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருநெல்வேலி: மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

minister
minister
author img

By

Published : Feb 21, 2021, 12:32 PM IST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 20) தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் வருவாய் துறையின் மூலம் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 721 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டாக்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் அறிவித்த திட்டமான கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக இன்டெர்நெட் டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தின் கீழ் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 22 ஆயிரத்து 817 மாணவ மாணவியர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டுகள், 4 ஆயிரத்து 981 பெண்களுக்கு ரூ.20.38 கோடி திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கமும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஐந்து பயனாளிகளுக்கு தலா 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - அமைச்சர் ராஜலட்சுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.