ETV Bharat / state

தரமான பாலை கொள்முதல் செய்ய பகுப்பாய்வு இயந்திரங்கள் அமைக்கத் திட்டம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்!

Milk Analysis Machines Set Up Plan: தரமான பாலை கண்டறிந்து கொள்முதல் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விரைவில் பகுப்பாய்வு இயந்திரங்கள் நிறுவப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

minister mano thangaraj said milk analysis machine will set up soon in all Purchase centres across tamil nadu
தரமான பாலை கொள்முதல் செய்ய தமிழகம் முழுவதும் பகுப்பாய்வு இயந்திரங்கள் அமைக்கத் திட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 10:21 AM IST

தரமான பாலை கொள்முதல் செய்ய தமிழகம் முழுவதும் பகுப்பாய்வு இயந்திரங்கள் அமைக்கத் திட்டம்

திருநெல்வேலி: பால் கொள்முதல் விலையை அதிகப்படுத்தும் நோக்கில் தரமான பாலை கண்டறிந்து கொள்முதல் செய்ய பகுப்பாய்வு இயந்திரங்கள் நிறுவும் திட்டம் தற்போது தமிழகத்தில் 50 சதவீதம் இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இது விரைவில் அமல்படுத்தப்படும் என்று திருநெல்வேலியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, சிறப்பாகச் செயல்பட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கடன் உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 2,302 பேருக்கு 1 கோடியே 37 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது பால் உற்பத்தியாளர்களுக்கும் தற்போது 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்து நாட்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

தரமான பாலுக்கு 39 ரூபாய் வரை கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. சென்ற மாதம் முதல் ஆவின் பொருள்களுக்குத் தமிழகத்தில் எங்கும் தட்டுப்பாடு இல்லை. மேலும், பால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே பாலின் தரம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யும் திட்டம் தற்போது தமிழகத்தில் 50 சதவீதம் இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இது விரைவில் அமல்படுத்தப்படும்.

தற்போது ஆவினில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த அவர், புதிதாக பால் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 300 புதிய கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியமர்த்தப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.