ETV Bharat / state

'அணுக்கழிவு மையம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்..!' - கடம்பூர் ராஜூ

திருநெல்வேலி: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு
author img

By

Published : Jun 9, 2019, 8:49 AM IST

தமிழ்நாடு செய்தி; விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும்.

மக்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையிலேயே இது குறித்து முடிவு எடுக்கப்படும். மக்களின் கருத்தைக் கேட்காமல் ஒருபோதும் மையம் அமைக்கப்படாது.

இந்தியாவிலேயே பிரதமரை அதிகமாகத் தரம் தாழ்ந்து விமர்சித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு எந்தத் திட்டமும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர முடியாது. ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் முதலமைச்சர் ஆவதுதான், அது ஒருபோதும் நடக்காது.

தமிழ்நாட்டில் குதிரை பேரம் மூலம் வெற்றியும் பெறமுடியாது. பாரதிய ஜனதா ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் தீர்க்க முடியாத சிக்ல்களான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது" என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும் தகவல்களுக்கு: கூடங்குளத்தில் அணுக்கழிவை சேமிப்பது, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்' - ஸ்டாலின்!

கூடன்குளத்தில் அணு கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் எனவும்
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதமானாலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேவையான நடவடிக்கை போர்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜூ நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அணு கழிவு அமையம் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மக்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் . மக்களின் கருத்தை கேட்காமல் ஒருபோதும் மையம் அமைக்கப்படாது.

நெல்லையில் ஆண்டுதோறும் குற்றாலம் சீசன் , மற்றும் நெல்லையப்பர் கோவில் தேர்திருவிழா ஆகியவற்றை மையாக வைத்து அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம் . இந்த ஆண்டு வரும் 22-ந்தேதி அரசு பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே பிரதமரை அதிகமாக தரம் தாழ்ந்து விமர்சித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 37 எம்.பிகளைக் கொண்டு எந்த திட்டமும் தமிழகத்திற்கு கொண்டுவர முடியாது. ஸ்டாலினின் ஓரே குறிக்கோள் முதல்வர் ஆவதுதான் அது நடக்காது, தமிழகத்தில் குதிரைபேரம் மூலம் வெற்றியும் பெறமுடியாது. பாரதியஜனதா ஆட்சியில் தமிழகர்களின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை, பாரதிய ஜனதா ஆட்சியில்தான் தமிழகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் உதரணமாக ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவுடன் அதிமுக உறவு நன்றாக உள்ளது. நீட் வேண்டாம் என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு . உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் நீர் தேர்வு நடந்தது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் தென்மேற்கு பருவமழை தாமதமானாலும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அணைகள் தூர்வாருவது குறித்து மத்திய அரசு அனுமதிபெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் , ஏழுபேர் விடுதலை குறித்து பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு உரிய அழுத்தம் கொடுக்கும் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.