ETV Bharat / state

புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ தெரியாதவன் தெரிஞ்சுக்கோ- நயினாரை சீண்டிய அமைச்சர் - திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்

புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ தெரியாதவன் தெரிஞ்சுக்கோ. ஏற்கனவே மாநில தலைவர் பதவி ஏமாற்றத்தில் இருக்கும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை வம்புக்கிழுத்த கால்நடைத்துறை அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன் அரசு நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டது.

நயினார் நாகேந்திரனை வம்புக்கிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jul 10, 2021, 6:38 PM IST

திருநெல்வேலி: மாவட்டம் ராமையன்பட்டி அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், மாணவர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையை மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை.10) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விடுதிக்கான கூடுதல் கட்டடங்கள் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்

தமிழ்நாட்டில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். கால்நடை துறையில் காலி பணியிடங்கள் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் காலி இடங்கள் நிரப்பப்படும். ஆடுகளுக்கு ஆட்டம்மை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது தொகுதிக்குட்பட்ட பள்ளமடை பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார். பின்னர், அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது அட்வான்ஸ் பொன்னாடை

இது அட்வான்ஸ் பொன்னாடை
இது அட்வான்ஸ் பொன்னாடை

அப்போது நயினார் நாகேந்திரன் இது அட்வான்ஸ் பொன்னாடை என்று கூறினார். உடனே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ’புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ தெரியாதவன் தெரிஞ்சுக்கோ’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

சால்வை போர்த்தும் படலம் ஏன்?

பாஜகவில் பெரும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில் நயினார் நாகேந்திரன் செயல்பட்டுவருகிறார்.

நயினார் நாகேந்திரனை வம்புக்கிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்

எனவே மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று தேர்தலுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புடன் அவர் இருந்தார். சமீபத்தில் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய இணையமைச்சரான பிறகு பாஜக மாநில தலைவர் நாற்காலி தனக்கு வரும் என நயினார் கணக்கு போட்டார்.

ஆனால், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலையை மாநில தலைவராக பாஜக தலைமை அறிவித்தது. இதனால் நயினார் நாகேந்திரன் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் தனக்கு சால்வை அணிவித்த நயினார் திமுகவில் இணைவார் என்பதைத்தான், ”புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ தெரியாதவன் தெரிஞ்சுக்கோ” என்று அனிதா கூறியிருப்பதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பற்றிக்கொள்ள கிடைத்த மற்றொரு கரம்... 2ஆவது குழந்தைக்கு தந்தையான பாஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.