திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அடுத்த சத்திரப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர்(26). இவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16.10.2018 அன்று ராமர் அந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிந்து ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி இந்திராணி முன்னிலையில் நேற்று (பிப்.22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ராமருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு: குடிபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்!