ETV Bharat / state

மக்களவை தேர்தல்: வெளிநாடு வாழ் இந்தியர் நெல்லை தொகுதிக்கு மனுத்தாக்கல்! - மக்களவை தேர்தல்

திருநெல்வேலி: மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சையாக போட்டியிட வெளிநாட்டு இந்தியர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் செல்வபிரகாஸ்ரஷ்
author img

By

Published : Mar 21, 2019, 8:21 PM IST

மலேசியாவில் வசித்து வரும் திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பகுதியை தனது பூர்வீகமாக கொண்ட செல்வபிரகாஷ் என்பவர் திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சையாக போட்டியிடுவதற்காக அவரின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷிடம்டெபாசிட் பணமாக 25 ஆயிரம் கட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் செல்வபிரகாஸ்ரஷ்

கடந்த 19 ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இதுவரை திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளர்களாக செல்வபிரகாஷும், ராகவனும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தென்காசி தொகுதிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு வெளிநாட்டு இந்தியர் மனுதாக்கல் செய்தார். டெபாசிட் பணம் கொண்டு வராததால் சிறிது நேர கால தாமததிற்கு பிறகு மனு தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு மனு தாக்கல் கடந்த 19 ம் தேதி துவங்கியது. இதுவரை திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளர் ராகவனும், தென்காசி தொகுதிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சையாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் செல்வபிரகாஷ் மனு தாக்கல் செய்ய வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பகுதியை தனது பூர்வீகமாக கொண்டவர். இவர் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அதிகாரிகள் டெபாசிட் பணமான 25 ஆயிரம் கட்ட சொல்லியுள்ளனர். திகைத்து போன வேட்பாளர் பணம் எடுத்து வரவில்லை என கூறி உடனடியாக ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்து வருவதாக கூறினார். இதனையடுத்து பணத்தை எடுத்து வந்த அவரது உறவினர் டெபாசிட் பணத்தை கட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

பேட்டி: செல்வபிரகாஷ்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.