ETV Bharat / state

“டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்” - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!

GK Vasan: டாஸ்மாக் கடைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், டெட்ரா பாக்கெட்டில் மது விற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக அரசை ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே வாசன் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 10:02 AM IST

டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே வாசன் கோரிக்கை!

திருநெல்வேலி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று (நவ.25) செல்லும்போது, வழியில் வண்ணாரப்பேட்டையில் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாள்தோறும் வரும் பத்திரிகை செய்திகள், இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு டாஸ்மாக் கடைகள்தான் அடிப்படை காரணம்.

போதைப் பொருள்களின் நடவடிக்கைகளை 100 சதவீதம் கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். போலீசார் தவறு செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பது த.மா.கவின் நீண்ட நாள் கோரிக்கை.

ஆனால், அரசோ டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கக் கூட தயாராக இல்லை. குறைக்கிறோம் என்று ஒருபுறம் கூறி, மறுபுறம் டாஸ்மாக்கில் புது மாடலாக டெட்ரா பாக்கெட்டில் மதுவைக் கொடுக்கும் நிலைக்கு, இந்தியாவிலையே தமிழகத்தில்தான் முதல் மாநிலமாக, அரசு டாஸ்மாக்கை முன்னேற்ற நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏற்கனவே, தமிழகத்தில் குடி பழக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் என பலரும் கெட்டுக் கிடக்கிறார்கள். இதில் டெட்ரா பாக்கெட்டில் மது அறிமுகம் செய்வது தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல என அரசை எச்சரிக்கிறோம். இதுபோன்ற தவறான செயல்பாட்டில் அரசு ஈடுபடக் கூடாது. ஒரு காலக்கட்டத்துக்குள் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடக் கூடிய முடிவை அரச எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபம்; மயிலாடுதுறை அருகே கொட்டும் மழையில் மாவொளி தீபத்தைச் சுற்றி மக்கள் விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.