ETV Bharat / state

தரை தட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நடவடிக்கை.. 7 நாட்கள் கடந்தும் தொடர் பின்னடைவு! - Koodankulam port

கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கும் மிதவைக் கப்பலை கரைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ஒரு அதிநவீன இழுவைக் கப்பல் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் துறைமுகத்தில் சிக்கிய மிதவை கப்பல்..மீட்பு பணியில் தொய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 9:50 AM IST

திருநெல்வேலி: கூடங்குளம் கடல் பகுதியில் சிக்கி உள்ள மிதவை கப்பலை மீட்க இலங்கையில் இருந்து அதிநவீன இழுவைக்கப்பல் வந்துள்ள நிலையில், மேலும் ஒரு இழுவைக் கப்பல் தேவைப்படுவதால் மீட்பு பணியில் தொடர் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

கூடங்குளம் துறைமுகத்தில் சிக்கிய மிதவை கப்பல்..மீட்பு பணியில் தொய்வு!

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து கப்பலில் கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள், கூடங்குளம் அணு உலைகளுக்காக இழுவை கப்பல் மூலமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்டது.

இழுவை கப்பல், கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள கயிறு அறுந்து தரை தட்டி நின்றது.

இதையும் படிங்க: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் விடுதலை குறித்து எங்கள் கையில் ஏதுமில்லை” - அமைச்சர் ரகுபதி

மேலும், மிதவை கப்பலை மீட்க சென்னை துறைமுகம் மற்றும் மும்பை மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் கப்பலை மீட்க முடியவில்லை. அதனைத்தொடர்ந்து, இந்திய அணுசக்திக் கழக அதிகாரிகள், மத்திய அரசிடம் வலியுறுத்தி இலங்கையில் இருந்து அதிநவீன இழுவை திறன் கொண்ட கப்பலை கூடங்குளத்திற்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கையாக இலங்கை கொழும்பு துறைமுகத்தில் இருந்து அதிநவீன இழுவை கப்பலானது கூடங்குளம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தரை தட்டி நிற்கும் மிதவைக் கப்பலை கரைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ஒரு அதிநவீன இழுவைக் கப்பல் தேவைப்படுவதால், கொழும்பு துறைமுகத்தில் இருந்து மேலும் ஒரு இழுவைக் கப்பல் வரவழைக்கப்பட்டு அதன் பிறகு மீட்பு பணிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 7 நாட்களாக கடலில் தரை தட்டி நிற்கும் மிதவைக் கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கத்

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயலாளர் காலில் விழுந்த சட்டத்துறை அமைச்சர்: வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.